மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

டீனேஜ்களிடம் தீயாய் பரவும் கண்ணம்மா!

டீனேஜ்களிடம் தீயாய் பரவும் கண்ணம்மா!

பிரபலமான எழுத்தாளரின் புத்தகங்கள் 500 விற்பதே சவாலான ஒன்றாக இருக்கும் காலகட்டத்தில் ஐ.டி கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களாய் சேர்ந்து ஆரம்பித்த எழுத்துப்பிழை என்ற பதிப்பகம் இது வரை மூன்று புத்தகங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முதல் இரண்டு புத்தகங்களும் 1500 புத்தகங்கள் விற்ற நிலையில் இந்த காதலர் தினத்துக்கு வெளியாகியிருக்கும் ‘கண்ணம்மா’ என்ற மூன்றாவது புத்தகமும் விரைவில் 1000 புத்தகங்களை கடக்க உள்ளது. இந்த புத்தகம் வெளியாவதற்கு முன்னரே 350 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்த நூல்களின் ஆசிரியர் மனோ பாரதி, பன்னாட்டு கம்பெனி ஒன்றில் வேலைப்பார்த்து விட்டு தற்போது சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கிய இவருக்கு கிடைத்த வரவேற்பும் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களும் இவர் புத்தகங்கள் எழுத காரணமாய் அமைந்தது.

முதல் புத்தகமான எழுத்துப்பிழை இளைஞர்களிடம் வரவேற்பு பெற்ற கவிதைகளைக் கொண்டது. அடுத்த புத்தகமான விகடகவி சிறுகதை தொகுப்பாக வெளிவந்தது.

மூன்றாவது புத்தகமான ‘கண்ணம்மா’ முழுக்க காதல் கவிதைகளால் நிரம்பியுள்ளது. இந்த கவிதைகளுக்கு இளைஞர்களை விட இளம்பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பது என்பதை எழுத்துப்பிழை முகநூல் பக்கத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது.

இவரது கவிதைகளில் தபூசங்கரின் பாதிப்பை காணமுடிகிறது. கவிதைகளைப் போலவே நூல் வடிவமைப்பும் ரசனையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓவியங்கள் கவிதைக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது.

flipkart, Paytm ஆகிய தளங்கள் மூலமாக ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்கின்றன. கீழேயுள்ள இந்த இணைப்பின் வழி புத்தகங்களை பெறலாம்.

‘கண்ணம்மா’

புத்தகத்திற்கான புரொமோஷனுக்காக யார் இந்த கண்ணம்மா என்ற ஒரு பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இணையத்தில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கீழேயுள்ள இணைப்பின் வழியே இந்த பாடலை நீங்களும் காணலாம்.

யார் இந்த கண்ணம்மா

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon