மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

இந்தியா - போலாந்து வேளாண் ஒப்பந்தம்!

இந்தியா - போலாந்து வேளாண் ஒப்பந்தம்!

போலாந்து நாட்டுடன் இந்தியா, வேளாண்மை மற்றும் அதைச்சார்ந்த தொழில்களுக்கு இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், ஒப்பந்தத்தின் சாதகமான மற்றும் பாதகமான செயல்களை கலந்து பேசி ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வேளாண் சார்ந்த தொழில்களின் தற்போதைய நடவடிக்கைகளை பரிமாறிக் கொள்ளவும், பயிர்களின் நலன்களை காக்கவும், தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகள், விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் தொற்று மற்றும் பயிர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு தீர்வுகாணவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக விவசாய கண்காட்சிகள், கருத்தரங்குகள், விவசாய நலன் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான மாநாடுகள் நடைபெறவும், இருநாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மாநிலங்களில் விவசாயம் மற்றும் உணவு வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon