மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

அமைச்சரின் சொத்துக்கள் பறிமுதல்!

அமைச்சரின் சொத்துக்கள் பறிமுதல்!

வங்கியில் தொழில் தொடுங்குவதுக்காக கடன் வாங்கிய ஆந்திர கல்வி அமைச்சரின் சொத்துக்களை, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் வங்கி பறிமுதல் செய்தது.

ஆந்திர மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் கன்டா சீனிவாசராவ். இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு தனது உறவினர்களுடன் சேர்ந்து விசாகப்பட்டினத்தில் சொந்த நிறுவனம் தொடங்கினார். இதற்காக அவரும், அவரது உறவினர்களும் தங்களது சொத்துக்களை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.141.68 கோடி கடன் வாங்கினர். ஆனால் கடனை சரியாக கட்டாததால் வட்டியுடன் சேர்ந்து கடன்தொகை ரூ.196 கோடி ஆனது. இதையடுத்து வங்கியில் இருந்து பலமுறை அமைச்சர் சீனிவாசராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் கடனை கட்டவில்லை.

அதையடுத்து, அமைச்சர் மற்றும் உறவினர்கள் அடமானம் வைத்த சொத்துக்களை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது. அமைச்சர் சீனிவாசராவுக்கு சொந்தமான சொத்துக்களில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிளாட்டும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon