மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ரூ.100 கோடியில் குடிமராமத்து திட்டம் : முதல்வர் பழனிச்சாமி

ரூ.100 கோடியில் குடிமராமத்து திட்டம் : முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தைப் போக்க ரூ.100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி ஆகும். ஆனால் இப்போது 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், 100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழகத்தின் 3௦ மாவட்டங்களில் 1௦௦ கோடி ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரி புனரமைப்பு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டப்பணிகள் மார்ச் முதல்வாரத்தில் தொடங்கப்படும் என்றும் முதல்வர்அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon