மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

தனுஷ் பெயரில் சர்ச்சை - சுசித்ரா கணவர் வேண்டுகோள்!

தனுஷ் பெயரில் சர்ச்சை - சுசித்ரா கணவர் வேண்டுகோள்!

பாடகி சுசித்ராவை தமிழ்சினிமா மறந்திருந்தது. தனுஷின் மீது ஆதாரமும், அடிப்படையுமற்ற புகாரை ட்விட்டர் போலீஸாரிடம் கொடுத்ததன்மூலம் மீண்டும் டிரெண்டிங்கில் இடம்பெற்றார் சுசித்ரா. தன்னை தனுஷின் குழுவினர் காயப்படுத்தியதாகவும், தனுஷ் விளையாடிய விளையாட்டை வெளியே சொல்லப்போவதாகவும் சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிடப்பட்ட தகவல்களினால் மிகவும் மோசமான சூழ்நிலை உருவானது. சுசித்ராவின் இந்த நடவடிக்கைகளின் காரணமறிய, அவரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை என்றும், விரைவில் இதுகுறித்து செயலாற்றுவோம் என்றும் சுசித்ராவின் கணவர் கார்த்திக் கூறியிருந்ததை நேற்று ‘சர்ச்சை நாயகன்’ தனுஷ் மீது சுசித்ரா புகார்! என்ற செய்தியில் கூறியிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக, சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரது ட்விட்டர் அக்கவுண்டில் சுசித்ராவின் ட்விட்டர் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக எந்த உண்மையும் இல்லை. இந்தப் பிரச்னை பர்சனலானது. நிலைமையைப் புரிந்துகொண்டு அதை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon