மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

பாறைக்குள் வசிக்கத் துணிந்த மனிதர்!

பாறைக்குள் வசிக்கத் துணிந்த மனிதர்!

சில மனிதர்களுக்கு இயற்கையாகவே வித்தியாசமான இடங்களில் தங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மரஉச்சியில் கூடு அமைத்து காடுகளில் தங்குவார்கள். மலைக் குகைகளில் தங்குவார்கள். பாதாள அறைகளில்கூட தங்க வேண்டும் என நினைக்கும் விநோத மனிதர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு மனிதர் பிரான்ஸில் இருக்கிறார். இவருக்கு மனிதர்கள் பொதுவாக வசிக்கமுடியாத இடங்களில் வசிப்பதே பிடித்தமானது. இவரது பெயர் ஆப்ரஹாம் போய்ன்சேவல்! பிரான்ஸில் உள்ள மியூசியத்தில் மக்கள் முன்னிலையில் பெரிய பாறையினுள் தங்குவதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி அதனுள் இப்போது குடிபுகுந்துள்ளார்.

ஒரு வார காலத்துக்கு பாறையினுள்ளேயே வசிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விநோதமான நடவடிக்கைகளுக்குப் பேர்போன ஆப்ரஹாம் பெரிய பாறையை தேர்வு செய்து, அதனுள்ளே ஒரு மனிதன் தங்கும் அளவுக்கு செதுக்கி, ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கவும் இடங்களை உருவாக்கியுள்ளார். காற்று வந்துசெல்லும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரீஸ் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பாறையினுள் குடிபுகுந்த ஆப்ரஹாம் போய்ன்சேவல் ஒரு வாரத்துக்கு இதிலிருந்து வெளியேறமாட்டாராம். முன்னதாக, இதே நபர் கரடி சிலையினுள் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தி இரண்டு வாரங்கள் தங்கியிருந்திருக்கிறார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon