மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

உ.பி. உத்தரகண்டில் பாஜக ஆட்சியமைக்கும் : அமித்ஷா

உ.பி. உத்தரகண்டில் பாஜக ஆட்சியமைக்கும் :  அமித்ஷா

பஞ்சாபில் மும்முனை போட்டி நிலவுவதால், அங்கு வெற்றியை கணிக்க முடியவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பாஜக ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேர்தலுக்கு பின் எந்தக் கட்சியுடன் பாஜ கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை.

தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பஞ்சாபில் அகாலி தளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆத் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுவதால் வெற்றியைக் கணிப்பது சிரமமாக உள்ளது. உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளரை பாஜக முன்கூட்டியே அறிவிக்காதது, கட்சியின் தேர்தல் உத்தியாகும். புதிய முதல்வரை கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் பேசி முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon