மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

புதிய பால் வழி அண்டம்: தெரிந்ததும் தெரியாததும்!

புதிய பால் வழி அண்டம்: தெரிந்ததும் தெரியாததும்!

நாசா அறிவியல் ஆராய்ச்சி மையம் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்தில் இருக்கிறது என்பதனை தேடித் திரிவது பலரும் அறிந்தது. அதனால் அவ்வபோது புதிதாக தென்படும் புதிய பொருட்கள் பற்றியும், பல்வேறு கிரகங்களில் மனிதன் வாழ ஏற்றதா? என்பது பற்றியும் தகவலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஆனால் இது ஒரு வழக்கமான ஒன்றாகவே அங்குள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மாறிற்று என்று தான் சொல்ல வேண்டும். விண் கற்கள் பூமியை நோக்கி வருவது பற்றியும், புதிதாக கண்டறிந்த ஒரு பிளாக் ஹோல் பற்றியும், சமீபத்தில் தோன்றிய பச்சை விண்மீன் பற்றியும் வெளியான தகவல்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது புதிதாக வெளியான தகவல் மக்களின் எண்ணங்களை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது மட்டுமின்றி, நாசாவின் ஆராச்சியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்தச் செய்தியை பற்றி விரிவாக காண்போம்.

கடந்த ஆண்டு சிலி நாட்டில் இருக்கும் நாசா ஆராச்சி மையம் பூமியில் இருந்தே Telescope வழியாக இரண்டு புதிய கோள்களை கண்டறிந்தது. அதற்கு TRAPPIST-1 System என்ற பெயர் சூட்டியது. The Transiting Planets and Planetesimals Small Telescope என்பதன் சுருக்கமே TRAPPIST ஆகும். அந்த இரண்டு புதிய கோள்களைப் பற்றிய ஆராச்சியைத் தொடங்கிய நாசா Spitzer Space Telescope என்ற டெலஸ்கோப் ஒன்றினை விண்ணில் செலுத்தி, துல்லியமான தகவல்களை ஆய்வு செய்து வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நாசா வெளியிட்ட ஆய்வு குறிப்பில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட இரண்டு கோள்கள் மட்டுமின்றி 5 புதிய கோள்களையும் கண்டறிந்துள்ள தகவலை உறுதிசெய்தது.

அதன் படி மொத்தம் புதிதாக கண்டறிந்த 7 கோள்கள் பற்றிய விரிவான தகவலையும் அதன் மாதிரி புகைப்படங்கள், மற்றும் அனிமேடேட் வீடியோக்களை வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம். அதில் இன்னும் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் அந்த கோள்கள் இருக்கின்றன. அதனை சென்றடைய இன்னும் சில ஆண்டுகள் நமக்கு தேவைப்படும், காரணம் அது நம் சூரிய குடும்பத்தில் இல்லாத கோள்கள் என்று தகவல் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி நமது பால்வெளியில் இருக்கும் கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றிவருவதை போன்றே அங்கு ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு 7 கோள்களும் சுற்றிவருகின்றன. அனைத்து கோள்களும் பெரும்பாலும் பூமியின் வடிவிலே காணப்படுகின்றன. அதேபோல் அனைத்து கோள்களிலும் மனிதனின் முக்கிய ஆதாரமான நீர் இருக்கிறது என்றும், மனிதன் வாழ அனைத்து காரணிகளும் 3 கோள்களில் உறுதியாக உள்ளது என்றும் தகவல் தெரிவித்தது நாசா. மனிதன் வாழ ஏதுவான வகையில் மூன்று கோள்கள் கண்டறியப்பட்டது இதுதான் முதல் முறை என்று நாசா ஆராச்சியாளர் தெரிவித்தார். மேலும் சூரியனை ஒப்பிடும் போது அங்கு காணப்படும் நட்சத்திரம் மிக சிறியது என்றும், அதில் வெப்பம் அதிகம் வெளியாகாத காரணத்தால் தான் அதன் அருகிலுள்ள கோள்களிலும் நீர்வளம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

நாசா ஆராச்சியாளர்கள் கருத்து

நமது பால்வெளிக்கு மிக அருகில் குளிர்ந்த ஒரு நட்சத்திரமும், அதனைச் சுற்றி நீர்வளம் கொண்ட பூமியின் அளவுடைய 7புதிய கோள்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறிந்தவற்றை காட்டிலும் இது மிக அற்புதமான ஒன்று. என்று நாசா ஆராச்சியாளர் சூன் கேரி தெரிவித்தார். அதுமட்டுமின்றி நிகோல் லெவிஸ் இது குறித்து பேசுகையில் முதல் முறை நான் அதை பார்க்கும் போது நம்பவில்லை. பின்னர் நான் இதை கண்டதும் பிரமித்து விட்டேன். இது போன்ற ஒரு நிகழ்வை நான் நினைத்து பார்க்க கூடவில்லை, இது என் கனவுகளுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்தார். மேலும் நீங்கள் ஒரு கோளின் மேல் நின்று கொண்டிருக்கும் போது பிற கோள்களையும் நீங்கள் எளிதாக காணமுடியும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு இந்த கோள்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக நாசா புதிய டெலஸ்கோப் ஒன்றினை விண்ணில் செலுத்த உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon