மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

கூந்தன்குளம் சரணாலயத்தில் குறையும் பறவைகள்!

கூந்தன்குளம்  சரணாலயத்தில் குறையும் பறவைகள்!

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் 4 ஆயிரம் பறவைக் கூடுகள் காலியாகவே உள்ளன. 140 வகையான பறவைகள் வந்து செல்லும்நிலையில் 12 வகை பறவையினங்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து 34 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளம். இங்குள்ள கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்த நீர் பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது சரணலாயம். பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும் இடமாகவும் விளங்குகிறது. சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டை தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிவது கணக்கிடப்பட்டுள்ளது. ஒராண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சூழல் மாறுபாடு காரணமாகவும், பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதாலும் கூந்தன்குளம் சரணாலயத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றாமல் புள்ளி மூக்கு வாத்து, பூநாரை, அரிவாள் மூக்கன், பிளமிங்கோ, கரண்டி மூக்கு உள்ளான் ஆகிய பறவைகள் வந்து செல்கின்றன. இதுவும் இல்லாவிட்டால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வெளிநாட்டு பறவைகள் இன்றி வெறுமையாக காட்சியளிக்கும்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon