மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ஸ்பைஸ்ஜெட் : 777 ரூபாயில் விமான டிக்கெட்!

ஸ்பைஸ்ஜெட் : 777 ரூபாயில் விமான டிக்கெட்!

அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும்வகையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ரூ.777 என்ற குறைந்த கட்டணத்தில் நான்கு நாள் சிறப்புச் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

குர்கான் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கிவரும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், 777 ரூபாயில் 'லக்கி 7 சேல்' என்ற பெயரில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட்டின் இந்த குறைந்தகாலச் சலுகை ஆஃபரில் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லக்கி 7 சலுகைத் திட்டம் மூலமாக பிப்ரவரி 25ஆம் தேதி நள்ளிரவு வரை பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் இந்தச் சலுகைமூலம், வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்தச் சலுகை விலை டிக்கெட்டுகள் ஒரு வழிப்பாதை பயணத்துக்கு மட்டுமே பொருந்தும். ஜம்மு-ஸ்ரீநகர், அகர்தலா-கவுகாத்தி உள்ளிட்ட வழித்தடங்களுக்கு ரூ.777 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon