மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 பிப் 2017

ஐ.பி.எல்.கிரிக்கெட்: இர்பான் உருக்கம்!

ஐ.பி.எல்.கிரிக்கெட்: இர்பான் உருக்கம்!

இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளையும் கவர்ந்த ஒன்று ஐ.பி.எல். தொடர். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இந்த ஐ.பி.எல். போட்டிகளுக்கான வீரர்களைத் தேர்வு செய்ய கடந்த திங்கட்கிழமை ஏலம் நடைபெற்றது. அதில் பலவிதமான முன்னணி வீரர்களையும் ஏலம் எடுக்க எந்த அணிகளும் முன்வரவில்லை என்பது ஒருபுறம் பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. இந்த ஐ.பி.எல். ஏலத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட வீரர்களில், இம்ரான் தாகிர், இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா போன்றோர் எந்த அணியினராலும் ஏலம் கேட்கபடாமல் போனது அவர்களின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

எனவே தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் இர்பான் பதான், ட்விட்டரில் செய்தி ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு முதுகுத் தண்டில் 5 இடங்களில் முறிவுகள் ஏற்பட்டது. அதன் பின்னர் நான் விளையாடக் கூடாது என சிறப்பு மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் நான் அவரிடம் "இந்த வலியை நான் பொறுத்துக்கொள்வேன், ஆனால் நாட்டிற்காக விளையாடாமல் இருக்கும் போது ஏற்படும் வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என் வாழ்வில் நான் பல்வேறு தடைகளை சந்தித்துள்ளேன். இருபினும் நான் விட்டுக்கொடுத்ததில்லை. இப்போது எனது முன்னாள் பல தடைகள் இருந்தாலும், அதனை உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் கொண்டு முறியடிப்பேன். இதை நான் எனது ரசிகர்களுக்காக பதிவிடுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வெள்ளி 24 பிப் 2017