மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ரப்பர் இறக்குமதி 39% சரிவு!

ரப்பர் இறக்குமதி 39% சரிவு!

இந்தியாவின் இயற்கை ரப்பர் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 39 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா கடந்த ஜனவரி மாதம் 24,093 டன் அளவிலான இயற்கை ரப்பரை இறக்குமதி செய்திருக்கிறது. இது, முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்ததைவிட 39 சதவிகிதம் அதிகமாகும். ஜனவரியில் உள்நாட்டு ரப்பர் உற்பத்தி அதிகமாக இருந்ததன் காரணமாக இறக்குமதி சரிந்துள்ளது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ரப்பர் உற்பத்தி அளவு 27 சதவிகித உயர்வுடன், 66,000 டன் அளவிலான இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இந்தியாவின் ரப்பர் பயன்பாடு ஜனவரியில் 84,000 டன்களாக இருந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரப்பர் பயன்பாடு 84,875 டன்களாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களாகவே சர்வதேச நாடுகளில் ரப்பர் விலை அதிகரித்ததோடு, அதன் விளைவாக இந்தியாவிலும் இயற்கை ரப்பர் விலை அதிகரித்தது. சர்வதேச அளவில் ரப்பர் விலை உயர்ந்ததாலும், இந்தியாவின் ரப்பர் உற்பத்தி அதிகரித்ததாலும், ரப்பர் இறக்குமதி குறைந்துள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா பெருமளவில் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது