மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

ஆஸ்கர் ஆவணப்படம்: திசைமாறும் மனித வாழ்க்கை!

ஆஸ்கர் ஆவணப்படம்: திசைமாறும் மனித வாழ்க்கை!

ஆவணப்பட இயக்குநர் எஸ்ரா எடெல்மேன் ஆவணத்தொடராக இயக்கியிருக்கும் படம், ‘O.J.: Made in America’. அமெரிக்க கால்பந்து என்றழைக்கப்படும் ரக்பி (rugby) விளையாட்டு வீரர் ஓ.ஜே.சிம்ஸனின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த திரைப்படம். ஒரு மனிதனின் வாழ்வு திசைமாறிப்போக ஒரு நொடி போதும். நிற வேற்றுமை, காதல், புகழ், துரோகம், விரோதம் என மனித வாழ்க்கையில் நம்மை திசைமாற்றும் ஒரு புள்ளியை மையமாக கொண்டு இந்த ஆவணப்படம் நகர்கிறது. புகழின் உச்சத்தில் இருந்த சிம்ஸன், தனது மனைவி நிக்கோல் பிரவுன் மற்றும் ரொனால்டு லைல் கோல்ட்மேன் ஆகியோரின் கொலை வழக்கில் எப்படி சிக்கினார். நிறவேற்றுமை காரணமாக அவர் அனுபவித்த விஷயங்கள் என ஒரு தனி மனிதன் வாழ்க்கையை அப்பட்டமாக ஆவணம் செய்திருக்கின்றனர். இந்த படத்தை ‘ESPN Films’ தயாரித்திருக்கிறார்கள். இதன் டிரெய்லரை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

O.J.Made in America

புதன், 4 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon