மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

அல்கொய்தா வங்கிக் கணக்குகள் முடக்கம்!

உரி தாக்குதல், அதையொட்டி இந்தியா நடத்திய ஊடறுப்பு தாக்குதலான சர்ஜிக்கல் அட்டாக். அதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஓயாதநிலையில், சர்வதேசளவில் பாகிஸ்தான் அரசுக்கு எழுந்த நெருக்கடிகளால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோர் அதற்குத் துணைபுரிவோரின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. பாகிஸ்தான் அரசின் ஆணைப்படி வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பான நடவடிக்கைகளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக, 5100 பேரின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் மாநில வங்கி முடக்கியுள்ளது பலத்த சலசலப்பை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளில் ஜெய்ஸ்-இ- முகமது என்னும் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மிகவும் முக்கியமானவர் ஆவார். காஷ்மீர் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் முதற்காரணியாக செயல்பட்டவர். தற்போது, இவர் காவல்துறை பாதுகாப்பில் இருக்கிறார். வங்கிக் கணக்குகள் 3 பிரிவுகளில் முடக்கப்பட்டுள்ளது. அதில் மசூத் அசாரின் வங்கிக் கணக்கு 1997ஆம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனப்படும் ‘ஏ’ பிரிவின் கீழ் உள்ளது. இதுதவிர, லால் மஸ்ஜித் மதரு மவுலானா அஜீஸ், அக்லே சன்னட் வால் ஜமாத் தலைவர்கள் மவுலவி அகமது லுதியான்வி, அவுரங்கசீப் பரூக்கி, அல்கொய்தாவைச் சேர்ந்த மதியுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் அடங்குவர்.

5100 பேரின் ரூ. 2,700 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon