மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அரசு ஊழியர்களுக்கு 28ஆம் தேதியே சம்பளம்! - தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு 28ஆம் தேதியே சம்பளம்! - தமிழக அரசு

தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 28ஆம் தேதியே சம்பளம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தீபாவளித் திருநாள் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி(சனிக்கிழமை) வருவதால், பண்டிகையை முன்னிட்டு இம்மாத சம்பளத்தொகையை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஊழியர் சங்கத்தின் கோரிக்கைப்படி, 2016ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கான சம்பளத் தொகையை அக்டோபர் 28ஆம் தேதியன்று வழங்க சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்க முதன்மைச் செயலர்/கருவூல கணக்கு ஆணையருக்கு அனுமதியளித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon