மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

குறும்படம்: காதலும் கடந்துபோகும்!

குறும்படம்: காதலும் கடந்துபோகும்!

காதல் பற்றி புகழ்பாடும் பல படங்கள் திரைப்படங்களாகவும் குறும்படங்களாகவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை பெரும்பாலும் காதலிக்கும் பெண்ணைச் சுற்றுவதாகவும் காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்வதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ‘Passing’ என்ற குறும்படத்தில் வயது முதிர்ந்த ஒருவரின் காதலையும் இளைஞர் ஒருவர் செய்யும் காதலையும் ஒருகோட்டில் இணைத்து வேறுபடுத்தியிருக்கிறார்கள்.

பொக்கே, கிரீட்டிங் கார்டுகள் விற்கும் கடையில், தன் கல்யாண நாளுக்கான பரிசாக ஏதாவது வாங்கவேண்டும் என நினைத்துவரும் ஒரு பெரியவர் பொக்கே, கிரீட்டிங் கார்ட் ஆகியவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு, எதுவும் சரியாக இல்லையே எனப் புலம்பியவாறு தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது கடையினுள் வரும் ஒரு இளைஞன் சிரித்த முகத்துடன், பெரியவர் வேண்டாம் என நினைத்த அனைத்தையும் வாங்கிக்கொண்டு செல்கிறான். பெரியவரும் ஒரு பரிசை வாங்கிவிட்டு வெளியே வந்தபின் அவர் பார்க்கும் காட்சிதான் எதிபார்க்காத கிளைமேக்ஸ். அங்குதான் படத்தில் காதலையும் சொல்கிறார்கள்.

தாத்தா வேண்டாம் என நினைத்த பொருட்களை எல்லாம் இளைஞன் வாங்கும் காட்சிகள் யதார்த்தமான கமெடிகளாக பதிவாகியிருக்கின்றன. 30 வருஷம் கழிச்சு தெரியும் என தாத்தா கொதிப்பது, குழந்தையைத் தூக்கிவரும் பெண்ணுக்கு கதவைத் திறந்துவிடுவது போன்ற இளைஞனின் கதாபாத்திரம் துறுதுறுவென இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில் தாத்தா, தன் பரிசைப் பார்த்து துப்பிக்கொள்வதும் இளைஞனின் செயலும் படத்தை இன்னும் தூக்கி நிறுத்துகிறது. படத்துக்குத் தேவையான காட்சியமைப்பு, இசை, நடிப்பு என சிறப்பாக வந்துள்ள இக்குறும்படத்தை ஜோலி ஹேல்ஸ் எழுதி இயக்கியுள்ளார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon