மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

துபாய்க்குச் செல்லும் பிரம்மாண்ட கிரைண்டர்!

துபாய்க்குச் செல்லும் பிரம்மாண்ட கிரைண்டர்!

உலகளவில் இட்லி, தோசைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்களும் தமிழர்களும் இந்த உணவை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளில் இட்லி, தோசைக்கு அதிக தேவை ஏற்பட்டுவருகிறது. அதற்காக, கோவையிலிருந்து 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இட்லி மாவு தயாரிக்கும் கிரைண்டர்கள் கோவையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது.

கோவையில் 5 லிட்டர் முதல் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரைண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, வெளிநாடுவாழ் இந்தியரான பிரதீப் சீனிவாசன் என்பவர் நான்கு 100 லிட்டர் கிரைண்டருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இது, உணவுக்காக தயாராகும் உலகிலேயே மிகப்பெரிய கிரைண்டர் என்ற பெருமையை உடையது. 100 லிட்டர் கிரைண்டர் தயாரிக்க இனிமேல்தான் தனியாகத் தயாரிக்க வேண்டும் என்று கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இங்கு, தற்போது தயாரிக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான 4 கிரைண்டர்களில் இரண்டு துபாய்க்கும், இரண்டு பெங்களூருவுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.5 லட்சம் ஆகும் என்று தயாரிப்பாளர் கூறினார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon