மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ஒரேக்குழந்தை - இருமுறை பிறந்த அதிசயம்!

ஒரேக்குழந்தை  - இருமுறை பிறந்த அதிசயம்!

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு ஒரே குழந்தை இருமுறை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வாஷிங்டன் நகரின் டெக்சாஸ் மாகாணத்தின் லீவிஸ்வீல் நகரைச் சேர்ந்த மார்கரேட் ஹாகின்ஸ் போமெர் என்பர் 16 வாரகாலம் கருவுற்றிருந்தார். அப்போது அவருடைய வயிற்றில் இருந்த குழந்தைக்கு டியூமர் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தையின் இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ’சாச்ரோசைஜியல் தெரடோமா’ என்ற அரியவகையான கட்டி குழந்தையின் முதுகெலும்பில் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ட்யூமர் 70000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் வரும். அதிலும் பெண் குழந்தைகள்தான் இந்தக் கட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும் குழந்தையை உடனடியாக அறுவை சிகிச்சைமூலம் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு போமெர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின், 23 வாரகாலம் ஆனநிலையில் கட்டி முழுமையாக வளர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பை முழுமையாகப் பாதித்ததால், உடனயாக போமெர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையை அகற்ற மனம் இல்லாத நிலையில் கரு 6 மாதங்கள் வரை நன்கு வளர்ச்சி பெற்றதால் மருத்துவர்கள் ஐந்து மணி நேரம் போராடி குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். பின், 20 நிமிடங்களில் குழந்தையின் முதுகில் இருந்த கட்டியை நீக்கிவிட்டு மீண்டும் தாயின் அறுவைசிகிச்சையின் மூலம் கருவுக்குள் வைத்துள்ளனர்.

இதையடுத்து, 12 வாரகாலத்துக்குப் பிறகு அக்குழந்தை மீண்டும் பிறந்துள்ளது. தற்போது குழந்தையின் உடல் நலமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு லைன்லீ ஹோப் என்று பெயரிடப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் வளர்ச்சியடையாத குழந்தை வெளியுலகுக்கு வந்து மீண்டும் கருவறைக்குள் வைத்து, இரண்டாவது முறை பிறந்தது உலகிலேயே இதுதான் முதல்முறை நடந்துள்ளது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon