மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர்!

நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர், உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 3,860 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடர்ந்த ட்விட்டருக்கு தற்போது வரையில் 2.3 பில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட வலைதளங்களின் வருகையால் ட்விட்டரின் சந்தை மதிப்பு சரிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, ட்விட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 300 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டரின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வருகிற வியாழனன்று பங்குச்சந்தை முடிவுக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. அன்று ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் ட்விட்டரின் புதிய சி.இ.ஓ.வாகப் பதவியேற்ற ஜாக் டோர்சே, அதிவிரைவில் ட்விட்டரில் சுமார் 336 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூருவில் உள்ள ட்விட்டர் வளர்ச்சி மையத்தில் பணிபுரியும் இந்தியப் பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த வளர்ச்சி மையம் தற்காலிகமாக மூடப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon