மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஹெச்.டி.எஃப்.சி. நிகர லாபம் 20% உயர்வு!

ஹெச்.டி.எஃப்.சி. நிகர லாபம் 20% உயர்வு!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி.யின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சென்ற ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகரித்து, ரூ.3,455 கோடியாக உள்ளது. அதேபோல, ஹெச்.டி.எஃப்.சி.யின் நிகர வட்டி வருவாய் சென்ற ஆண்டைவிட 19.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.7,994 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஹெச்.டி.எஃப்.சி.யின் நிகர வட்டி வருவாய் ரூ.6,680.90 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி.எஃப்.சி.யின் இதர வருவாய் சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.2,551.76 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் ஹெச்.டி.எஃப்.சி.யின் இதர வருவாய் 13.68 சதவிகிதம் அதிகரித்து, ரூ.2,900.95 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, ஹெச்.டி.எஃப்.சி.யின் நிகர வருவாய் சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கிடைத்த ரூ.9,233 கோடியைவிட 18 சதவிகிதம் அதிகரித்து ரூ.10,143 கோடியாக உயர்ந்துள்ளது.

வைப்புத்தொகை கடந்த நிதியாண்டைவிட 16.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.5.91,731 லட்சம் கோடியாக உள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி. தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டும் லாபம் பெற்றுவரும் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி.க்கு இந்தியாவில் 4,541 கிளைகளும், 12,013 ஏடிஎம்-களும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon