மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

மல்லையாவுக்கு மீண்டும் கெடு!

மல்லையாவுக்கு மீண்டும் கெடு!

கிங்ஃபிஷர் தொழிலதிபரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான வெளிநாட்டு சொத்துகளின் முழு விவரத்தை அடுத்த நான்கு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டிஷ் நிறுவனமான டியாஜியோவிடம் இருந்து 40 மில்லியன் டாலர் விஜய் மல்லையா பெற்றிருந்தார். இதுகுறித்த விவரங்களை மல்லையா அளிக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, “கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நாங்கள் மல்லையாவின் ஒட்டுமொத்த சொத்து விவரமும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம். ஆனால் அவர், நீதிமன்றத்தில் அதைச் சமர்ப்பிக்கவில்லை. குறிப்பாக, 40 மில்லியன் டாலர்கள் தொகை விவரங்களையும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம். அதுகுறித்தும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அறிகிறோம்” என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, இந்த 40 மில்லியன் டாலர்கள் தொகை விவரங்கள் உட்பட அனைத்து அயல்நாட்டு சொத்து விவரங்களையும் அடுத்த நான்கு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய நீதிபதிகள் அடுத்த விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon