மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி!

மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி!

கடந்த மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் ‘ஆண்டவன் கட்டளை’. ‘காக்கா முட்டை’ மூலம் கவனம் பெற்ற மணிகண்டன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தவர், ‘இறுதிச்சுற்று’ படத்தில் கதாநாயகியாக நடித்து பட்டையைக் கிளப்பிய ரித்திகா சிங். படத்தின் இறுதி காட்சியில் விஜய்சேதுபதி, தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என கேட்கும்போது வெட்கமும் காதலும் ஆச்சர்யமும் கலந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. விஜய்சேதுபதிக்கும் அவருக்குமான பொருத்தம் அத்தனை இயல்பாக இருந்தது. இந்நிலையில் இவர்கள் மீண்டும் மற்றொரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2009இல் வெளியாகி திரை விமர்சகர்களிடயே குறிப்பிடத்தக்க விவாதத்தை ஏற்படுத்திய ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தை இயக்கியவர் ஆர்.பன்னீர் செல்வம். இளம் குற்றவாளிகளுடைய வாழ்க்கை பின்னணியில் மெல்லிய காதலையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ரேணிகுண்டா திரைப்படம் அதீத வன்முறை, வழக்கமான காதல் என்று பழைய பாடுபொருள்களையே கொண்டிருந்தாலும் உருவாக்கத்தில் கச்சிதமாக இருந்தது.

தற்போது ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் இந்த வெற்றி ஜோடி இணையும் செய்தி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிக, நடிகையர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon