மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

பே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்!

பே-டிஎம் வங்கி தொடக்கம் தாமதம்!

வருகிற தீபாவளியன்று இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதாக அறிவித்திருந்த பே-டிஎம் பேமெண்ட் வங்கி, ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் முடிவுக்குள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பேமெண்ட் பேங்க்’ என்பது சிறிய வங்கி ஆகும். இங்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் சேமித்து (டெபாசிட்) வைக்க இயலும். அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் வழங்கப்படும். மேலும், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், இவ்வங்கியில் பிற வங்கிகளைப் போல கடன் வழங்கப்பட மாட்டாது. மேலும், கிரெடிட் கார்டுகளும் கொடுக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டில் பேமெண்ட் பேங்க் சேவையைத் தொடங்குவதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் 11 நிறுவனங்களுக்கு மட்டும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது. ஆதித்யா பிர்லா நுவோ, ஏர்டெல் எம். காமர்ஸ் சர்வைஸ், சோழ மண்டலம் டிஸ்ட்ரிபூஷன் சர்வைசஸ், டிபார்ட்மெண்ட் ஆஃப் போஸ்ட்ஸ், ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூட்டிரீஸ் டெபாசிடரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, பே-டிஎம், டெக் மஹிந்திரா, வோடஃபோன் எம்.பேசா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பேமெண்ட் வங்கி தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

விஜய் சங்கர் சர்மாவின் பே-டிஎம் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பேமெண்ட் வங்கியைத் தொடங்குவதாக அறிவித்து, சில காரணங்களில் அதன் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற தீபாவளி தினத்தன்று அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து இறுதி கட்ட ஒப்புதல் பெறப்படாததால், அதன் அறிமுகம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘முதற்கட்ட மூலதனமாக ரூ.300 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த பேமெண்ட் வங்கி இந்தாண்டின் முடிவுக்குள் அறிமுகப்படுத்தப்படும்’ என்று விஜய் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon