மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

WWE: திருட்டுப்பட்டம் கட்டப்பட்ட ‘Boogyman’

WWE: திருட்டுப்பட்டம் கட்டப்பட்ட ‘Boogyman’

WWE ரெஸ்லிங்கில் எத்தனையோ வீரர்களை கண்டு பிரமித்திருப்போம், சந்தோஷப்பட்டிருப்போம், கோபம் கொண்டிருப்போம். ஆனால், புழுக்களை தின்று கொண்டு அருவெறுப்பு கொள்ளவைக்கும் ஒரே வீரர் பூகிமேன். WWE மேடையில் சண்டையிட வரும் பூகிமேனின் இயர் பெயர் மார்டி ரைட். 2004ஆம் ஆண்டில் இருந்து ரெஸ்லிங்கில் கலந்து கொண்டுவரும் பூகிமேன், 2006ஆம் வருடம் முதல் WWE-இல் கலந்து கொள்ளத் தொடங்கினார். அண்டர்டேக்கர் முதற்கொண்டு பல முன்னணி வீரர்களுடன் மல்லுகட்டியிருக்கும் 52 வயதான இவர், ரெஸ்லிங்கில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். இதனால், பூகிமேன் போட்டிகளில் எதுவும் கலந்து கொள்ளாத நிலையில், அமெரிக்காவில் உள்ள HOPE என்ற ரெஸ்லிங் அமைப்பினர் வேண்டுதலின்படி அவர்களின் போட்டிகளில் சண்டையிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், கடந்த ஞாயிற்றுகிழமை நடக்க இருந்த போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால், மிகுந்த வெறுப்படைந்த அமைப்பினர், ட்விட்டர் தளத்தில், ‘போட்டியில் கலந்துகொள்ள முடியாது என்றால் தெரிவித்திருக்கலாம். இப்படி பணத்தை வாங்கிக்கொண்டு மறைவது திருட்டுத்தனம்’ என்று பதிவிட்டுள்ளனர். ஆனால், ‘அந்த சமயம் அவரால் வர முடியவில்லை. மற்றபடி பணத்தை எடுத்துக்கொள்ளும் நோக்கம் எல்லாம் இல்லை’ என பூகிமேனின் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் செய்திகள் கூறப்படுகிறது.

புழுக்களை தின்றுகொண்டு மேடையில் ஏறும் இவர் போட்டியில் வென்றாலும் தன் சட்டையில் இருக்கும் புழுக்களை எடுத்து தின்பார். இதனாலே சில வீரர்கள் பூகிமேனை கண்டு அருவெறுப்பு கொண்டு சண்டையிட தயங்குவர். வீரர்களின் தயக்கத்துக்கு இன்னுமொரு காரணத்தையும் சொல்ல வேண்டும் என்றால் போட்டியின்போது மிகுந்த கோபம் கொண்டால் புழுவினை எடுத்து சக வீரர்களின் வாயில் திணித்து விடுவார் என்பதே!

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon