மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

பால்குடம் நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்காத காவலர் சஸ்பெண்ட்!

பால்குடம் நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்காத காவலர் சஸ்பெண்ட்!

பச்சையம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா நலம்பெற ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால் குடம் எடுத்த நிகழ்ச்சியில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும் இன்னும் அவர் பூரண குணமடையவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகே வேலூர் ரோட்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தனர். இதில் கூட்டநெரிசலில் சிக்கி எட்டு பேர் காயமடைந்தனர். மேலும், கமலாம்பாள் என்ற 6௦ வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பால்குட ஊர்வலத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரின்பேரில், திருவண்ணாமலை காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சியில் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என கூறி ஆய்வாளர் சுரேஷ் மீது எஸ்.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon