மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

ஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’!

ஓவியர்களுக்குப் புத்துணர்வு தரும் ‘ஃப்ளிப் புக்’!

குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ‘ஃப்ளிப் புக்’ போன்ற ராட்சஷ ஃப்ளிப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இங்கிலாந்தைச் சேர்ந்த நியூ ஹம்ப்ஷைர் வனப்பகுதியில், பெரிய உலோக பெட்டியினால் செய்யப்பட்ட ஃப்ளிப் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 50 ஓவியங்களை கொண்டிருக்கிறது. இதனை இயக்குவதற்கு ஏதுவாக கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது. இதனை வேகமாக சுழற்றுவதன் மூலம், சிறிய அனிமேஷன் உருவாவதைப் போன்ற காட்சியினை காணலாம். இதுகுறித்து மொபைல் ஸ்டூடியோ இயக்குநர் ஜி-கிட் லாய், “தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவலின்படி, உலகத்திலேயே மிகப்பெரிய மெக்கானிக்கல் ஃப்ளிப் புத்தகம் இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

லண்டன் கட்டடக்கலை நிறுவனமும், பீம் கேம்ப் எனும் சம்மர் கேம்ப் தொகுப்பாளர்களும் இணைந்து இதனை உருவாக்கியிருக்கிறார்கள். சிறுவர்களுக்குப் படைப்பாற்றலையும், இயங்கும் சிற்ப உருவாக்கத்தையும் அதிகரிக்கவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ‘யுனிவர்சல் ப்ளே மிஷின்’ என்று அழைக்கிறார்கள். இந்த புத்தகங்களில், பறவையின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. பகல் வேளைகளில் இதன் சைடு பேனல், சுற்றியிருக்கும் மரங்களை பிரதிபலிக்கிறது. இரவு வேளைகளில், LED ஒளியில் அதனுள் நடக்கும் மெக்கானிக்கல் வேலைப்பாடுகள் வெளிப்படையாக தெரிகிறது. இதன் மூலமாக ஓவியர்கள், ஆண்டாண்டு காலத்துக்கு தங்கள் படைப்பினை வெளிப்படுத்தி அனிமேஷன் காட்சிகளை உருவாக்க முடியும் என்று கருதப்படுகிறது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon