மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

ட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்!

ட்விட்டர் கலாய்ப்பில் சிக்கிய அக்தர்!

எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறிய முதல் பாகிஸ்தான் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர், சமீனா பெய்க். சமீபத்தில் இவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ‘சொயாப் அக்தர்’, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். சொயாப் அக்தர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் நபர். இவர் பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் மேல் தெரியாத்தனமாக ஆங்கிலத்தை தவறாக பயன்படுத்திவிட்டார். அவ்வளவு தான், யாருடா கிடைப்பா கலாய்க்கிறதுக்குனு காத்துக்கொண்டிருக்கும் ட்விட்டர்வாசிகளிடம் மாட்டிக்கொண்டார். இந்தியா - பாகிஸ்தான் என பாரபட்சம் இல்லாமல், இரு ரசிகர்களும் மாற்றி மாற்றி கலாய்த்து அவரது பதிவினையே மாற்ற வைத்து விட்டனர். அதில் , “உங்கள் ஆங்கில மொழியினை 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருக்கிறீர்கள்” என ஒருவர் கலாய்த்திருக்கிறார். இப்படியாக சரமாரியான கலாய்க்கப்பட்டிருக்கிறார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon