மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

பட்ஜெட் கார்களுக்கான ஹைஃபை டெக்னாலஜி!

பட்ஜெட் கார்களுக்கான ஹைஃபை டெக்னாலஜி!

Anker என்னும் ஹார்ட்வேர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் Dashtop என்ற தனது புதிய தொழில்நுட்பத்தைத் தயாரித்திருக்கிறது. காரில் செல்லும்போது நமது ஸ்மோர்ட்போனை எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும், காரின் நிலை மற்றும் டிராஃபிக் குறித்த செய்தி, மேப் போன்ற பல வசதிகள் இதில் அடங்கியிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் நவம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கிறது. கார் தயாரிப்பில் தொழில்நுடபங்கள் அடுத்தடுத்த கட்டத்தை தாண்டி வருகின்றன. ஆவ்டி, BMW, பென்ஸ் போன்ற காஸ்ட்லியான கார்கள் ஆட்டோமேடிக் டிரைவிங், மேப் ஸ்கிரீன், டிராஃபிக் ஸ்கிரீன் போன்ற பல வசதிகளை தங்களின் காரில் புகுத்தி வருகின்றனர். ஆனால், இந்த வகை கார்கள் சும்மாவே விலை நெருங்க முடியாத அளவில் இருக்கும்பட்சத்தில் இந்த தொழில்நுட்பங்கள் அதிக வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படும்படி இருந்தது.

இச்சமயத்தில், Anker நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த Dashtop பட்ஜெட் கார் வைத்திருப்பவர்களும் பயன்படும்படி அமைந்துள்ளது. Dashtop-ஐ நமது ஸ்மார்ட்போன் மூலம் கனெக்ட் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் GPS, Map போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி டிராஃபிக் குறித்த தகவல், சாலை நிலைமைக்கு தகுந்த வேகத்தை காட்டுவது என அசத்தலான பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை குறித்து தகவல் வெளிவராத நிலையில் பட்ஜெட் கார் வைத்திருப்பவர்களின் விருப்பத்தை பெற்று வருகிறது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon