மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 22 அக் 2019

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது?

புதிய கல்விக்கொள்கை – தமிழக அரசு என்ன செய்யப், போகிறது?

புதிய கல்விக்கொள்கை மற்றும் ‘ஆல் பாஸ்’ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலையை பள்ளிக்கல்வி அமைச்சர் டெல்லியில் இன்று அறிவிக்கிறார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை ஜூலையில் வெளியானது. அந்த அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறையினரிடம் கருத்துகள் பெறப்பட்டன. அத்துடன், மாநில அரசுகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. கருத்துக்கேட்பு செப்டம்பர் 30ஆம் தேதி முடிந்தது.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்து மாநில கல்வி அமைச்சர்களுடன், கல்விக்கான மத்திய அரசு குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு வரை அமலில் உள்ள, ‘ஆல் பாஸ்’ திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது, 10ஆம் வகுப்பில், சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பாடத்திட்டத்திலும், கட்டாயப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபீதா உள்ளிட்டோர் பங்கேற்று புதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழக அரசின் நிலையை தெரிவிக்க உள்ளனர். தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon