மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

ஐடி நிறுவன வேலைவாய்ப்பு குறையுமா?

ஐடி நிறுவன வேலைவாய்ப்பு குறையுமா?

இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தகவல் தொழில்நுட்பத் துறையில்தான். ஆனால், இதுகுறித்து அதிர்ச்சிகர செய்திகளைக் கூறுகிறார்கள் வல்லுநர்கள். இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சியைச் சந்தித்த இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி தற்போது ஒற்றை இலக்கமாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழல் இல்லை. மேலும், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்த நிறுவனங்கள் ஈடுபட தொடங்கியுள்ளன. வளர்ச்சி குறைவுக்கான முக்கிய காரணமாக எந்திர மயமாக்கலே கருதப்படுகிறது. இதை மறுத்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.வி மோகன்தாஸ் பாய், ‘இந்திய ஐடி துறையின் வளர்ச்சி அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிலையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

உலக அளவில் அவுட்சோர்சிங் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்களிப்பு 60 சதவிகிதம். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து மட்டும் 110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சாப்ட்வேர் தயாரிப்புகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த துறை மூலம் 42.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். உலகில் உள்ள முதல் 10 சாப்ட்வேர் நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கின்றனர். இவ்வாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வேலைவாய்ப்பினை தரும் ஐடி துறை வளர்ச்சி வீழ்ச்சி, பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon