மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

நட்புக்கு மரியாதை!

நட்புக்கு மரியாதை!

நட்பையும் நண்பனையும் கொண்டாடுகிறவர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருவர் தன் நண்பர் தீபாவளிக்கு வாங்கி கொடுத்த சட்டையைக் கிட்டதட்ட 64 வருடங்களாக பாதுகாத்து வருகிறார்.

தீபாவளி என்றாலே அனைவருக்கும் புத்தாடை அணிவது வழக்கம். ஆனால், நாகுப்பிள்ளை (87) என்ற முதியவர் தன் நண்பர் எடுத்துக் கொடுத்த சிகப்பு நிற சட்டையை மட்டுமே தீபாவளிக்கு அணிந்து வருகிறார். மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகுப்பிள்ளை. 1952ஆம் ஆண்டு இவருடைய நண்பர் சீனி, நாகுப்பிள்ளைக்கு எடுத்து தந்த புது சட்டையைத்தான் தீபாவளி அன்று அணிந்து வருகிறார். அவருடைய தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டில் எடுத்து கொடுத்த சட்டையைக்கூட அணியாமல், தன் நண்பர் வாங்கிக் கொடுத்த சட்டையை அணிந்துள்ளார். இவருக்கு, தீபாவளி பண்டிகையின்போது மகன், மருமகன்கள், பேரக்குழந்தைகள் புத்தாடை எடுத்துக் கொடுத்தாலும் அதையொல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தனது நண்பர் எடுத்துக் கொடுத்த ஆடையை அணிந்து வருகிறார். இவரது நண்பர் சீனி 1972ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அவரின் நினைவாகச் சட்டையை அணிந்து வருவதாக கூறுகிறார். நட்புக்கு இவர் கொடுக்கும் மரியாதையைப் பார்த்து அவரின் குடும்பத்தார் பெருமிதம் கொள்கின்றனர். மேலும், தன் உயிருடன் இருக்கும் நாள் அளவும் இந்த சட்டைதான் என் தீபாவளி ஆடை என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon