மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

Ballon d'Or விருது : மெஸ்ஸி vs ரொனால்டோ!

Ballon d'Or விருது : மெஸ்ஸி vs ரொனால்டோ!வெற்றிநடை போடும் தமிழகம்

கால்பந்தின் முக்கிய அமைப்பான FIFA, 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து Ballon d'Or என்ற விருதை வழங்கி வருகிறது. ஐந்து வருடமாக கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த முறையும் கொடுக்கப்படுகிறது. இதற்கான nominate-கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விருதானது ஒரு வருட காலத்தில் அதிக கோல், அசிஸ்ட் அடிப்படையில் அனைத்து கிளப் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் கொடுக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக, ஐந்து வீரர்கள் கொண்ட பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல், செர்கியோ அக்யூரா, லாதன் இம்ப்ரோமோவிக், கொன்ஸாலோ ஹியூஜின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆறு ஆண்டுகளில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் ஆகியோருக்கான பட்டமாகவே இருந்துவரும்நிலையில், இந்தாண்டு வீரர்கள் மாறுவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் ஐந்து லிஸ்ட்டில் வந்த வீரர்களின் விவரம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ:

போர்சுக்கியூஸ் நாட்டைச் சேர்ந்த இவர், ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணியில் விளையாடி வருகிறார். 2015 - 2016 வரை இவர் சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்காக அடித்த கோல்கள் 41 கோல்களும், 15 அசிஸ்ட்களும் செய்துள்ளார்.

கேரத் பேல்:

ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் கெரத் பேல் ரியல் மெட்ரிட் அணி வீரராவார். இவர் 51 கோல்களும் 29 அசிஸ்ட்டும் செய்துள்ளார்.

செர்கியோ அக்யூரா:

61 கோல்கள் அடித்து, 26 அசிஸ்ட்டும் செய்துள்ளார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் மான்சஸ்டர் சிட்டி அணிக்காக ஆடி வருகிறார்.

லாதன் இம்ப்ரோமோவிக்:

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் 38 கோல்கள் அடித்துள்ளார்.

கொன்ஸாலோ ஹியூஜின்:

36 கோல்களும், 7 அசிஸ்ட்டும் செய்துள்ளார். அர்ஜெண்டீனா வீரரான இவர் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்னும் பல வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ரோனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவருக்குமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை, கொடுக்கப்பட்ட ஆறு ஆண்டுகளில் மெஸ்ஸி நான்கு முறையும், ரோனால்டோ மூன்று முறையும் வாங்கியிருக்கிறார்கள். இதில், ஒருவர் 4 முதல் இடம் பெறும்போது மற்றொருவர் இரண்டாம் இடம் பெற்று வருகின்றனர்.

திங்கள், 24 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon