மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் முதல் நாளான நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 101.90 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.90 புள்ளிகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்ந்து 28,103 புள்ளிகளாகவும், நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8,699 புள்ளிகளாகவும் இருந்தது. பின்னர், வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 101.90 புள்ளிகள் உயர்ந்து 28,179.08 புள்ளிகளில் முடிவடைந்தது. இது 0.36 சதவிகித உயர்வாகும்.

அதேபோல, தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தக நேர முடிவில் 15.90 புள்ளிகள் உயர்ந்து 8,708.95 புள்ளிகளில் முடிவுற்றது. இது 0.18 சதவிகித உயர்வாகும். பங்குகள் கண்டறிய உதவும் 30 நிறுவனங்களில் அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பங்குகள் 4.61 சதவிகிதம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 3.09 சதவிகிதம் சரிந்துள்ளது. இதுதவிர, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், லூபின் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க், எல்.டி. இன்ஃபை உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகியுள்ளன.

திங்கள், 24 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon