மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

அரியலூரில் காளான் வளர்ப்பு பயற்சி!

அரியலூரில் காளான் வளர்ப்பு பயற்சி!

அரியலூர் மாவட்டத்தின் சோழமாதேவி கிராமத்திலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

இந்த வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயி மதியழகன் பேசுகையில், “காளானில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், மனிதர்களுக்கு புரதச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் நோயை தீர்க்க வல்லது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு ஆகும். இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை, பல் மற்றும் எலும்பு நோய்கள் வராமல் தடுக்க முடியும்” என்றார்.

வேளாண் விரிவாக்க விஞ்ஞானி ராஜ்கலா கலந்து கொண்டு, பால் காளான் மற்றும் சிப்பி காளான்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார். பயிற்சியின்போது, நிலத்தடி நீர் சேமிப்பு, பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது, வீடு, கிராமங்களைச் சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மை இந்தியா பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திங்கள், 24 அக் 2016

chevronLeft iconமுந்தையது