மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை! - அப்டேட் குமாரு

இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை! - அப்டேட் குமாரு

ஹலோ... என்னது ஏழுபேர் அரெஸ்ட்டா? நான் சும்மாதான் சார் இருக்கேன். இல்லை, இல்லை அப்டேட் குமாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்டேட் குமாருன்னு ஒருத்தர் இல்லவே இல்லை. ஹலோ... ஹலோ... ஹலொ.... உஸ்ஸ்ஸ்ஸ்.... அப்டேட்டை படிங்க மக்களே.

//@ria_twits

பழனி படிக்கட்டு மாதிரி six pack வைச்சிருந்த புருசன, மனைவி பாதையில போட்டு அடிச்சது....

சற்றுமுன்_ரசித்த_இயற்கைக் காட்சி//

//@pattasu

எங்க அப்பாக்கும் வழுக்கை இருந்தது. அதனால் எனக்கும் வழுக்கை இருக்குது என்பதுகூட சரிதான். ஆனா எங்க அப்பாக்கும் வறுமை இருந்தது அதுனால என்பதுதான்//

//@sundartsp

நம்மளைப் பத்தி நம்மளே புகழ்ந்துகொள்ளக் கூடாதுன்னுதான் அம்மாவை படைக்கிறார்கள் போல//

//@mekalapugazh

நாம் செய்யும் சில செயல்கள் அடுத்தவர் செய்தால் நமக்கு எரிச்சல் வருகிறதென்றால் அதுவும் ஆதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடே...//

//@jino_off

போலிஸ்கிட்ட பொய் சொல்லக்கூடாது மாட்டிக்குவோம்!

போலிஸ்கிட்ட உண்மையும் சொல்லக்கூடாது அப்பவும் மாட்டிக்குவோம்!//

//@Amy_ui

ரெண்டு செல்லயும் சவுண்டு ஃபுல்லா வச்சி பாட்டு போட்டுவிட்டு யாருமே இல்லாத வீட்ல அப்டியே கத்தி அழுவுறது இருக்கே தெய்வீக லெவல் .....//

//@vishnut87

சனிக்கிழமையும் அதுவுமா ஆறேழு மணி நேரம் இனிதாய் பொழுதை வீட்டோடு கழிக்கவேண்டுமெனில் பொறுமையாய் ராஜ் டி.வி.யில் கர்ணன் திரைப்படம் பாருங்கள்//

//@mullai10

வழக்கமா 11.30க்கு காகத்துக்கு சோறு வைக்குறதாம். இன்னைக்கு லேட்டாகிட்டாம். காகம் எதையும் காணோமாம். #அம்மா புலம்பல்கள்//

//@soonapaana

சிவநாகம்னு ஒரு கன்னடப் படம் தமிழ்ல டப் ஆகி ரிலீஸ் ஆகியிருக்கே, ஒரு தமிழ் அமைப்புமா கண்டனம் தெரிவிக்கல !!//

//@ammu twits

வாழணும் நல்லா வாழணும்

பிடிச்சவங்கள இம்சை பண்ணிக்கிட்டே வாழணும்....//

//Mohamed Muqthar

சார்ஜ் போட்டுட்டே போன் பேசுனா வெடிச்சிடும்னு சொல்லுங்கடா கேட்டுக்கிறேன்...

அந்த வெடிச்ச போட்டோல்லாம் போடாதிங்கடா டேய்...//

//கா. விஜய் ஆனந்த்

நேரம் தவறுதல் என்பது ஒரு இந்தியப் பிரஜையின் அடிப்படை உரிமை

இத புரிஞ்சுக்காம ...//

//Ezhilan M

அக்சுவலி செல்வி.ஜெயலலிதாவின் ஆங்கில ஆளுமையைப் பாராட்டி வாட்ஸ்அப்பில் பதிவு ஒன்று இட்டேன்.

குரூப்பே பதறுது!

நம்ம ஆளுங்க நார்மல் ஆக சில வாரம் ஆகும்போல!

பயப்படுறதுக்கும் ஒரு லாஜிக் வேண்டாமா?//

//சோ நாகராஜன்

அந்தக்கால ராஜாதி ராஜ ,,ராஜ கம்பீர என்ற துதிதான் இப்போது கழக நிரந்தர,,,மாண்புமிகு புரட்சி,,,ன்னு மருவி இருக்கு.

மன்னா, இவன் ஒரு துதியை விட்டுவிட்டான் கவனித்தீரா?//

-லாக் ஆஃப்

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon