மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

மீண்டு வருவாரா தோனி?

மீண்டு வருவாரா தோனி?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தரவரிசையில் முதல் இடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதவுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை தர்மசாலாவில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

கோலி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக பல சாதனைகள் புரிந்துவரும் நிலையில், தோனி தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர்மீது அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. கடந்த சில தொடர்களில் தோனி தலைமையிலான ஒருநாள் அணியும், தோனியும் அதிகமாக ஜொலிக்காததால், இந்தத் தொடரின் மூலம் தன் தலைமைமீதும், தன் பேட்டிங் மீதும் இருக்கும் அவப்பெயரை போக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: தோனிக்கு மிகப்பெரிய சவால் காத்துக்கொண்டிருக்கிறது. அணியில் தன் நிலைமையை நிலைநாட்டிக்கொள்ள கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். 30 வயதைத் தாண்டிய ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இதுபோன்ற கடுமையான சூழலை சந்திப்பது சகஜமே. இந்தத் தொடரில் கோலி முக்கியமான வீரராக அமைவார் எனவும் தெரிவித்துள்ளார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon