மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

உலக கோப்பை கபடிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிவருகிறது. தென்கொரியா, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜெண்டினா ஆகிய அணிகளுடன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 32-34 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வியை தழுவியது. பிறகு, சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் 54-20 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும், மூன்றாவது போட்டியில் 57-20 என்ற புள்ளிக்கணக்கில் வங்காளதேசத்தையும் வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் பலம்குறைந்த அர்ஜெண்டினா அணியுடன் மோதுகிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் பலவீனமான அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமான சூழலில் இருக்கும்.

மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-ஆஸ்திரேலியா அணிகள் மாலை 6.50 மணிக்கு மோதுகின்றன. தென்கொரியா 4வது வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் ஈரான்-ஜப்பான் அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon