மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஸ்டாலினுக்கு வரவேற்பு:உண்ணாவிரதத்தில் திருநாவுக்கரசர்!

ஸ்டாலினுக்கு  வரவேற்பு:உண்ணாவிரதத்தில் திருநாவுக்கரசர்!

காவிரி பிரச்னைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்றுப் பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்

திருநாவுக்கரசர்.காவிரி விவகாரத்துக்காக திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னூர் உழவர் சந்தையில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா. சிதம்பரம், தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களும் பங்கேற்ற்னர். உண்ணாவிரதத்தில் பேசிய திருநாவுக்கரசர் “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிட்டது. பிறகு தன் விருப்பம் போல் நிறுத்திவிடுகிறது. எனவே காவிரி பிரச்னைக்கு இது நிரந்தர தீர்வு இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே காவிரி பிரச்னைக்கு ஒரே நிரந்தர தீர்வு. எனவேதான் மத்திய அரசிற்கு நான்கு வார காலக் கெடு கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தியது ஏன்? உச்ச நீதிமன்ற தீர்ப்பை மோடி அரசு அவமதித்தது ஏன்? என மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசிடம், விவசாயம் பாதித்த பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி பிரச்சனையில் செயல்படவேண்டிய மத்திய அரசு செயல்படாமல் உள்ளது வன்மையாக கண்டித்தக்கது. திமுக சார்பில் காவிரி பிரச்னைக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நடவடிக்கை எடுத்ததை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அதே போல் தற்போது பொறுப்பில் உள்ள நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும். அனைவரையும் டெல்லிக்கு அழைத்து சென்று காவிரி பிரச்னையில் தமிழகத்தற்கு நீதிகிடைக்க அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவர் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். ” என்று பேசினார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon