மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

கோவை மதுக்கரை சிறுமுகை வனப்பகுதியில், பிறந்து பத்து நாட்களேயான குட்டி யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, முதுமலை யானை முகாமில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்துசென்ற குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

குட்டி யானை பிறந்து பத்து நாட்கள்தான் ஆகியுள்ளதால், அதற்கு தாய்ப்பால் இல்லாமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் முதுமலை யானை முகாமில் குட்டி யானை வரவால் யானைகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 2014ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே தாயைப் பிரிந்த மூன்று வயது மதிக்கத்தக்க பெண் யானைக் குட்டி வனப்பகுதியில் தவித்து வந்தது. அப்போது, இதன் தாய் யானை இறந்திருக்கவோ அல்லது அசாதாரண சூழ்நிலையில் குட்டியைப் பிரிந்திருக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் வனத் துறையினர் கூறினர்.

சமீபத்தில், கோவையில் தாய் யானை இறந்தது தெரியாமல், அதை குட்டி யானை பல மணி நேரம் எழுப்ப முயன்ற பாசப் போராட்டம் நினைவிருக்கலாம்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon