மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 அக் 2016

ஏர் இந்தியா லாபம் ரூ.105 கோடி!

ஏர் இந்தியா லாபம் ரூ.105 கோடி!

கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக நடந்துமுடிந்த 2016ஆம் நிதியாண்டில் ரூ.105 கோடி லாபம் பெற்றுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1932ஆம் ஆண்டு டாடாவால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் பின்னர், ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்வேஸுடன் இணைந்தபிறகு ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.

2014-15 நிதியாண்டில் ரூ.2,636 கோடி நஷ்டமடைந்த ஏர் இந்தியா, நடந்து முடிந்த 2015-16 நிதியாண்டில் ரூ.105 கோடி லாபம் பெற்றுள்ளது. விமான எரிவாயு விலை குறைவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய காரணங்களால்தான் வருவாய் அதிகரித்துள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.5,859 கோடியாக இருந்த நிகர நஷ்டம் 2015-16 நிதியாண்டில் ரூ.3,837 கோடியாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, முந்தைய ஆண்டில் 16.88 மில்லியன் பேர் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தநிலையில் நடந்துமுடிந்த நிதியாண்டில் 6.6 சதவிகித உயர்வுடன் 18 மில்லியன் பேர் பயணித்துள்ளனர்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon