மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்தியாவில் அதிக முதலீடு - ரஷ்யா!

இந்தியாவில் அதிக முதலீடு - ரஷ்யா!

உள்கட்டுமானப் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ’தேசிய உள்கட்டுமான முதலீட்டு நிதி’ நிறுவனத்துடன் இணைந்து, ரஷ்யா 500 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்கட்டுமானம், மின்சாரம், பெட்ரோ கெமிக்கல், போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில் ரஷ்யா மேம்பாட்டுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இதற்காக ’ரஷியன் நேரடி முதலீட்டு நிதி நிறுவனம்’ (RDIF) மூலமாக இந்தியாவில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவின் தேசிய உள்கட்டுமான முதலீட்டு நிதி நிறுவனமும் ரஷ்யாவின், ரஷியன் நேரடி முதலீட்டு நிதி நிறுவனமும் இணைந்து 1 பில்லியன் டாலர் முதலீடு செய்கின்றன. இதற்கான ஒப்பந்தம் இன்று தொடங்கிய எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகிறது.

ரஷியன் நேரடி முதலீட்டு நிதி நிறுவனத்தின் (RDIF) மூத்த செயலாளர் கிரில் டிமிட்ரிவ் கூறுகையில், “RDIF-ன் பங்குதாரர்களாக உள்ள ரஷ்ய வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் இந்தியாவில் தொழில் மேம்பாட்டுக்காக அதிகளவிலான நிதி முதலீடு செய்யப்படும். தற்போது 1 பில்லியன் டாலர் நிதி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளநிலையில் அடுத்து வரவிருக்கும் காலங்களில் 8 பில்லியன் டாலர்கள் வரையில் முதலீடு செய்யப்படும். ரஷ்யாவிலிருந்து மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிக முதலீடு செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon