மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

ஏர்டெல் பிராட்பேண்டு இலவச டேட்டா!

ஏர்டெல் பிராட்பேண்டு இலவச டேட்டா!

பிராட்பேண்டு சேவையில் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக ஏர்டெல் நிறுவனம் மூன்று மாத இலவச டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. மேலும் டேட்டா வேகத்தை 100.எம்.பி.பீ.எஸ். ஆக உயர்த்துகிறது

ரிலையன்ஸ் ஜியோவுடன் சந்தையில் கடுமையாகப் போட்டியிட்டுவரும் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், தொடர்ச்சியாக இலவச அழைப்பு மற்றும் இலவச டேட்டா சலுகைகளை அறிவித்து வருகிறது. அடுத்தகட்டமாக, 12 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்த ஜியோவை பின்னுக்குத் தள்ளி புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், ஏற்கனவே உள்ள பிராட்பேண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் ஏற்கனவே பிராட்பேண்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் மோடத்தை (modem) மட்டும் ரூ.1,000 செலவில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், அவர்கள் மூன்று மாத இலவச டேட்டாவுடன் 100 எம்.பி.பீ.எஸ். வேகத்தில் அதிவேக டேட்டாவைப் பெறலாம். பிராட்பேண்டு வரலாற்றிலேயே 5 மில்லியன் வாடிக்கையாளர்கள் இவ்வாறு தங்களது பிராட்பேண்டு இணைப்பின் தரத்தை உயர்த்துவது இதுவே முதன்முறையாகும்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon