மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பட்டு ஏற்றுமதி: சர்வதேச கண்காட்சி தொடக்கம்!

பட்டு ஏற்றுமதி: சர்வதேச கண்காட்சி தொடக்கம்!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு ஆடைகளை அயல்நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும்விதமாக சர்வதேச இந்திய பட்டு ஆடை கண்காட்சி டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.

பட்டு உற்பத்தியில் இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. மேலும் பட்டின் மல்பரி, டஸர், எரி மற்றும் முகா ஆகிய அனைத்து வகைகளையும் தயாரிக்கும் ஒரே நாடாகவும் உள்ளது. இந்தியாவில் பட்டு உற்பத்தி அதிகமாக இருப்பதால் அவற்றை அயல்நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து லாபம்பெற மத்திய ஜவுளி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு முயற்சியாக, சர்வதேச பட்டு கண்காட்சி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பட்டு கண்காட்சி இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பட்டு நுகர்வோர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பட்டு மற்றும் பட்டு சார்ந்த தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கூறுகையில், “இந்தியாவின் பட்டு ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இதுபோல ஒரு கண்காட்சியை தொடர்ந்து நடத்திவருகிறது. இதன்மூலம் பட்டு உற்பத்தி மேற்கொள்ளும் சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி பயன்பெறுவார்கள்” என்று கூறினார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon