மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

பா.ரஞ்சித்தின் ஆவணப்படம் இன்று வெளியீடு!

பா.ரஞ்சித்தின் ஆவணப்படம் இன்று வெளியீடு!

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி என அடித்தட்டு மக்களின் கதைகளை களமாகக் கொண்டு தனக்கென தனி இடத்தை பெற்றவர் இயக்குநர் பா.ரஞ்சித். இந்த நிலையில் தற்போது ‘நீலம்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ மற்றும் ‘டாக்டர் ஷூ மேக்கர்’ என்னும் இரண்டு ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். இதில் ஜாதிகளிடம் ஜாக்கிரதை ஆவணப்படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். டாக்டர் ஷூ மேக்கர் ஆவணப்படத்தை பாண்டிராஜ் மற்றும் வினோத் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இரண்டு படங்களுமே நாட்டில் இருக்கும் சாதிய வேற்றுமையையும், அதனால் நடக்கும் பாதிப்புகளையும் முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆவணப்படங்களின் வெளியீடு மற்றும் திரையீடல் பிரசாத் லேப்பில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற இருக்கிறது.

பா.ரஞ்சித் வரவேற்பு உரை நிகழ்த்தி தொடங்கி வைக்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை, ஆதவன் தீட்சன்யா, வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் மற்றும் ஓவியர் சந்துரு அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon