மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 17 நவ 2019

தபால் நிலையங்களில் பருப்பு விற்பனை!

தபால் நிலையங்களில் பருப்பு விற்பனை!

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ‘ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும்’ என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி நிலையில், பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் பருப்புவகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் மானிய விலையில் பருப்பு வகைகளை விற்க மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ஹேம் பாண்டே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கிடையிலான குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

‘‘மத்திய அரசுக்கு மாநிலங்களில் விற்பனை நிலையங்கள் அவ்வளவாக இல்லாததால், நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட தபால் நிலையங்கள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை மானிய விலையில் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பண்டிகை காலத்தில் மக்களுக்கு குறைவின்றி பருப்புவகைகள் கிடைக்கும்” என்று மத்திய நுகர்வோர் அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 1,54,000 தபால் நிலையங்கள் உள்ளன. அவற்றில் கிராமப்புறங்களில் இருப்பவை 1,39,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon