மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு!

குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு!

ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலையோ அதேபோன்றது குறும்படம் எடுப்பதும். கதை, திரைக்கதை எழுதி, படத்தின் பட்ஜெட்டின் முடிவு செய்து அதற்கேற்றார் போல் நடிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களைச் சமாளித்து, போக்குவரத்து, உணவு, போஸ்ட் புரொடக்‌ஷன் என சிறிய குழுவை வைத்துக்கொண்டு ஒரு குறும்படம் எடுப்பது எளிதான காரியமல்ல. இப்படி கஷ்டப்பட்டு கடினமாக உழைத்து படம் எடுப்பது எதற்கு? தங்கள் திறமைகளை வெளிக்காட்டத்தானே? ரசிகர்களை கவர்வதற்கு தானே? இதற்கெல்லாம் ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது SUBMIT என்ற குழு. 2007ஆம் ஆண்டில் இருந்தே குறும்படம் எடுப்பவர்களை ஊக்குவித்துவரும் இந்த அமைப்பினர் தற்போது குறும்படம் இயக்குபவர்களுக்கு ரசிகர்களையும், தங்களின் படத்துக்கு தகுந்த விமர்சனத்தையும் பெற்றுக் கொள்ளும் விதமாக Short of the Week என்ற குறும்படத் திருவிழா ஒன்றை தொடங்கியுள்ளனர்.

விமர்சனங்கள்

இவர்களுடைய இணையதளத்தில் படத்தை பதிவிட்டப்பின் நமது குறும்படம் உலகளவில் இருந்து பல விமர்சகர்களும், ரசிகர்களும் பார்வையிடுவர். அதிலிருந்து பல கருத்துகள் நம்மால் பெற முடியும். அதுமட்டுமின்றி இந்த குழுவில் சேர்ந்த பல குறும்பட இயக்குநர்கள் Fox, Warner, Disney போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். மேலும், இந்த நிறுவனத்தில் இருந்தும் நமது படங்களுக்கான விமர்சங்கள் கொடுக்கப்படுகின்றன.

விதிமுறைகள்

1. நாம் சமர்ப்பிக்கும் குறும்படம் 10 - 40 நிமிடங்களுக்கு உள்ளவையாக இருத்தல் வேண்டும்.

2. படத்தில் பயன்படுத்தப்படும் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, வேறு படத்தில் உள்ள இசையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.

3. நீங்கள் சமர்ப்பிக்கும் படம் விருது வாங்கியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

4. படத்தை சமர்ப்பிக்க மட்டும் வேண்டும் என்றால் 29 டாலரும், சமர்ப்பிப்புடன் விமர்சனமும் வேண்டும் என்றால் 56 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

5. உங்கள் படம் தேர்வு செய்யப்படவில்லை என்றால் பணம் திருப்பித் தரப்படாது.

சமர்பிக்கும் படத்தை குறித்து Short of the Week அமைப்பினரின் எதிர்பார்ப்பு

1. படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு, இசை ஆகிய அனைத்தும் புரஃபெஷனலாக இருத்தல் வேண்டும்.

2. வித்தியாசமான கதைக்கும், திரைக்கதைக்கும் வரவேற்பு உண்டு.

3. சிறுகதையையோ அல்லது கதையில்லாமலோ ஆப்ஸ்ட்ராக்ட் படங்கள் மற்றும் மியூசிக் வீடியோக்கள் அனுப்பப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படாது.

4. காமெடிப் படங்களில் ஒரு பஞ்ச் வசனத்தை மட்டும் பயன்படுத்தி காமெடி செய்வது போன்ற படங்கள் நீக்கப்படும்.

உங்களின் படம் தேர்வு செய்யப்பட்டால்

1. பெரும் அளவிலான விருந்தினர்கள் முன் உங்களின் படம் திரையிடப்படும்.

2. தேர்வான பிறகு படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்ப வேண்டும்.

3. உங்கள் படத்தை பற்றிய பல கேள்விகளும், விவரங்களும் கேட்கப்படும்.

4. இவை அனைத்தும் திருப்தி அடைந்தபின் படம் திரையிடப்படும். திரையிடப்படும் தேதி மற்றும் பரிசு குறித்து படத்தின் தேர்வு முடிந்தபின் அறிவிக்கப்படும்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon