மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

காதி பவன்: பட்டு புடவைக்கு 40% தள்ளுபடி!

காதி பவன்: பட்டு புடவைக்கு 40% தள்ளுபடி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, காதி கிராமோத்யோக் பவனில் பட்டு புடவைகளுக்கு, 40 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற சிறு,குறு தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தும் சேவையை மத்திய அரசின் காதி கிராமோத்யோக் பவன் செய்து வருகிறது. இதுகுறித்து சென்னை, காதி கிராமோத்யோக் பவன் மேலாளர் செல்வராஜ் கூறியதாவது:

“காதி கிராமோத்யோக் பவனுக்கு சொந்தமான தறி கோவை, கொட்டகாட்டு பாளையத்தில் உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு, ஜரி பட்டு, ஜக்காடு டிசைன் பட்டு புடவைகள் சென்னை, காதி பவனில் விற்கப்படுகின்றன. குறைந்த பட்சம், ரூபாய் 5,000 முதல், ரூபாய் 11,000 வரை பட்டுப்புடவைகள் உள்ளன. இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு, பட்டு சேலைகளுக்கு, 40 சதவிகித சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி முடியும் வரை இந்த தள்ளுபடி உண்டு” என்று அவர் கூறினார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon