மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை!

மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் சிகிச்சையில் இருப்பதால், அவர் நிர்வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவரும் தனது பணிகளைத் தொடங்கி செய்து வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரை, ஆலோசனைப்படி தான் இலாகாக்கள் அனைத்தும் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பே திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே இது அவசியம் என்று சொல்லியிருந்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இதே கருத்தைச் சொல்லியிருந்தனர். ஆனால், அப்போது அதனை பலரும் எதிர்த்தனர்.குறிப்பாக, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், ‘பொறுப்பு முதல்வரை நியமிக்கத் தேவையில்லை’ என கடுமையாக எதிர்த்தார்.ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக கவர்னர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் முதல்வர் ஜெவின் ஆலோசனை, பரிந்துரையின்படி முதல்வரின் இலாகாக்கள் அனைத்தும் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.பொதுவாக கவர்னர்கள் மாநிலத்தின் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பற்றி அவ்வப்போது மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை அனுப்புவது வழக்கம். அதன்படி தமிழக நிலவரம் பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று முன்தினம் கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளாராம். அந்த அறிக்கையில் முதல்வரின் இலாகாக்கள் மாற்றம் செய்திருப்பது பற்றி மட்டுமே தெரிவித்துள்ள கவர்னர், முதல்வரின் உடல்நலன் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையாம்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon