மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 17 நவ 2019

வணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்!

வணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆணையர் சந்திரமவுலி, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியபோது: “2016-17ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.31,367.18 கோடி மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி கடந்த 2015-16இல் இதே காலத்தில் வசூலான ரூ.29,172.95 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.2,194.23 கோடி கூடுதல் வருவாய் ஆகும். 2016-17ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிக வரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரி வருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்ட வேண்டும். வணிக வரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும், போலி வணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரி வரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரி வருவாயினை அதிகப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon