மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

சிமெண்ட் விலை உயர்வு!

சிமெண்ட் விலை உயர்வு!

கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உற்பத்தி மந்தநிலையில் இருந்தபோதிலும், அவற்றின் விலை மூட்டைக்கு ரூ.30 முதல் 40 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மேற்கு பகுதிகளில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, 50 கிலோ எடையுடைய மூட்டை ஒன்று ரூ.332க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் விலை ரூ.30 முதல் ரூ.40 வரையில் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதங்களில் பருவமழை தீவிரமாக இருந்ததால் சிமெண்ட் உற்பத்தி பாதிப்படைந்தது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிமெண்ட் உற்பத்தி வெறும் 2.3 சதவிகிதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் - ஜுன் காலாண்டில் சிமெண்ட் உற்பத்தி 6 சதவிகிதம் உயர்ந்திருந்தது.

சிமெண்ட் விற்பனையின் முன்னணி சந்தையான மகாராஷ்டிராவில் மூட்டைக்கு ரூ.24 உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் செப்டம்பர் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.55 உயர்த்தப்பட்டது. இம்மாதத்தில் அதே விலை நீட்டிக்கப்பட்டு மூட்டை ஒன்று ரூ.369க்கு விற்பனை செய்யப்படுகிறது. இக்காலாண்டு முழுவதும் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் சிமெண்ட் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளருக்குப் போதிய லாபம் கிடைக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 15 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon